×

நெல்லை பேருந்துகளில் ஆர்டிஓ ஆய்வு: படிகளில் பயணம் செய்வோருக்கு அறிவுரை

நெல்லை: நெல்லை மாநகர பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். படிகளில் தொங்கி கொண்டு செல்லும் மாணவர்களை அழைத்து அறிவுரை கூறினர். கொரோனா தளர்வுகள் காரணமாக நெல்லை மாநகரில் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் 100 சதவீத இருக்கைகளில் ஆட்களை ஏற்றி கொண்டு செல்கின்றன. மேலும் பஸ்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அடிக்கடி படிகளில் தொங்கி கொண்டு செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.

நெல்லை கலெக்டர் விஷ்ணு உத்தரவின் பேரில், நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மோட்டார் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் வண்ணார்பேட்டை, பாளை மாவட்ட மைய நூலகம் ஆகிய இடங்களில் பஸ்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனர். பஸ்களில் படியில் நின்று கொண்டு பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர். விபத்துகள் இல்லாத பயணத்திற்கு போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.


Tags : RTO , Paddy, bus, RTO, inspection
× RELATED பள்ளி, கல்லூரி வாகனங்களில் கேமராக்கள்,...